Wednesday, 18 September 2013

உளறல்

இந்த ஞாபக மறதிகரனுக்கு ப்ளாக் ஒன்னு இருக்குன்னே மறந்து போச்சு.
பயங்கரம்ம படிப்பேன் ஆனா எதுவுமே மனசுல நிற்காது. அது மனசா, மூளையா எதுன்னே தெரியல(புரியல).நானும் ரொம்ப நாளா எழுதணும் நம்மளையும் நாலு பேர் படிக்கணும் அப்புடின்னு ரொம்ப நாள் ஆசை. ஆசை மட்டும் இருந்தால் போதுமா. கொஞ்சமாவது உழைக்க வேண்டாமா ?நான்
ஒன்னாம் தர சோம்பேறி...

நமக்கும் உழைப்புக்கும் ரொம்ப தூரம். ஒன்னாம் தர சோம்பேறி  
படிக்கிறது கூட ரொம்ப தேடுறது கிடையாது. கிடைக்குறத படிக்கிறது, லிங்குகள பயன் படுத்தறது. அதுக்காக ரொம்ப மோசம் கிடையாது. என்ன தேவையோ அதை தேடுறது, அதற்கு மேலும் தேடுவது. ரொம்ப மொக்க போடுறனோ. அதாவது தமிழில் எது கிடைத்தாலும் படிப்பது. இது நெட் என்று இல்லை சுண்டல் மடித்த பேப்பரில் கிடைத்தாலும் படிப்பது.

எவ்வளவு ஆக்க பூர்வமாய் படித்தாலும், அந்த வேகம் ரொம்ப நேரம் நீடிக்காது. அடுத்த பொழுது போக்குகுதான் மனம் செல்லும். என்னால் அதை கட்டு படுத்த முடிய வில்லை. ஆனால் மனம் மறுபடியும் தமிழ் நோக்கி செல்லும்.

இந்த எழுத்து ஆர்வம் தோன்றியது அறியா வயதில். சொல்ல போனால் கிரைம் நாவல்கள் படிக்க ஆரம்பித்த பொழுதில், அதாவது 199+ களில். அன்று இருந்த உலகம் வேறு, இன்று இருக்கும் எதுவும் அதனுடன் அளவிட முடியாதது.

எனக்கும் ஏதாவது கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றும். 
அப்பொழுது எழுதுகிறேன். இப்பொழுது மன்னிக்கவும்.... 

இப்படிக்கு 
உங்கள் பாசமிகு(எப்படி இருக்கும்)
 மறதிக்காரன்